இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தொடர்ந்து விளையாடும் பதினொருவர் அணியில் இடம்பெறாதது ஆச்சரியமளிப்பதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜெரமி கோனி தெரிவித்துள்ளார்.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பளிக்கப்படாத முகமது சிராஜ், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடும் பதினொருவர் அணியில் சேர்க்கப்படவில்லை.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜெரமி கோனி, முகமது சிராஜ் அனுபவம் வாய்ந்த வீரர் என்றும், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தும் திறன் கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிராஜ் சிறப்பாகப் பந்துவீசி இந்திய அணியின் வெற்றிக்கு பங்களித்ததாகவும், அவர் தொடர்ந்து இந்திய அணியின் விளையாடும் பதினொருவர் அணியில் இடம்பெற வேண்டியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 356 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.


