இந்தியாவின் ஒடிசா மாநிலம் பாலேஷ்வர் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் ஐந்து குட்டி ஒரங்குட்டான்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரங்குட்டான்கள் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவை அல்ல; அவை இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் காடுகளில் மட்டுமே இயற்கையாக வாழ்கின்றன.
இதனால், இந்தக் குட்டிகள் சர்வதேச வனவிலங்கு கடத்தல் கும்பலால் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு கைவிடப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஒடிசா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை மற்றும் வனஉயிர் குற்றத் தடுப்புப் பிரிவு(Wildlife Crime Control Bureau) இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளன.
மீட்கப்பட்ட ஐந்து குட்டிகளும் தற்போது புவனேஸ்வரில் உள்ள நந்தன்கானன் உயிரியல் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்டு, கால்நடை மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.


