Sunday, October 11, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்இந்தியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட 5,000 பேருக்கும் அதிகமானோர் கைது!

இந்தியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட 5,000 பேருக்கும் அதிகமானோர் கைது!

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட 5,000-க்கும் மேற்பட்டோர் பொலிஸாரால் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, இடதுசாரி மாணவர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று (10) போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தன. எனினும், இந்தப் போராட்டத்துக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.

தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்காக, 4,000 பெண் பொலிஸார் உட்பட 14,000 பொலிஸார் டெல்லி முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், காவல்துறையின் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டதாக மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments