நடிகர் ஆர்யா நடிக்கும் அவரது 40ஆவது திரைப்படத்திற்கு ‘ஹலோ காதல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, படத்தின் பெயர் தொடர்பான டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன், வணிக ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
தற்போது, இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் ஆர்யா நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் ஆர்யா தனது 40ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். ‘ராஜா ராணி’ திரைப்படத்தைப் போன்ற காதல் கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தில், நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்நிலையில், ‘ஹலோ காதல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


