இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியா பாராட்டு தெரிவித்துள்ளார்.
வைபவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக தெரிவித்துள்ள ஜெயசூர்யா, அவருக்கு இன்னும் நீண்ட பயணம் உள்ளதாகவும், கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி தனது திறமையை நிரூபிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக டி20 தொடரில் 3 போட்டிகளில் 42 ஓட்டங்களை பெற்ற வைபவ், தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் 151 ஓட்டங்களை குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


