Monday, June 8, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்அண்ணாமலைக்கு எதிரான வழக்கு: ஒன்றரை மணி நேரம் நேரில் ஆஜராகி டி.ஆர்.பாலு விளக்கம்

அண்ணாமலைக்கு எதிரான வழக்கு: ஒன்றரை மணி நேரம் நேரில் ஆஜராகி டி.ஆர்.பாலு விளக்கம்

2023ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தமிழக பாஜ தலைவராக இருந்த அண்ணாமலை, திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக பொருளாளர் டிஆர்பாலு உள்ளிட்டோரின் சொத்துக்கள் குறித்த பட்டியலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலையிடம் ரூ.100 கோடி இழப்பு கேட்டு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு டி.ஆர்.பாலு ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களுக்கு டி.ஆர்.பாலு கூறுகையில்,” 21 நிறுவனங்களுக்கும் எனக்கும் தொடர்பு என

அண்ணாமலை சொல்லியிருந்தார். அதில் 18 நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தேன். ஒன்றரை மணி நேரம் நேரில் ஆஜராகி அத்தனை விளக்கமும் அளித்தேன். வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” என்றார். மேலும், அண்ணாமலை,” 2004ம் ஆண்டு நீங்கள் நிறைய ஊழல் செய்ததால் தான் 2009ல் உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை” கூறியதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கோபமடைந்த டி.ஆர்.பாலு, “சரியான நேரத்தில் பதில் சொல்கிறேன். அண்ணாமலை சொல்லும் போது என்னிடம் சொல்வார்” என்றார். மேலும், ரூ.10 ஆயிரம் கோடி குறித்து நிருபர் எழுப்பிய கேள்விக்கு, ‘ பதில் சொல்ல முடியாது போய்யா’ எனக்கூறிவிட்டு சென்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments