Tuesday, November 3, 2026
spot_img
Homeகனடா செய்திகள்ஹலோவின் இனிப்புப் பண்டங்களில் காத்திருந்த அதிர்ச்சி

ஹலோவின் இனிப்புப் பண்டங்களில் காத்திருந்த அதிர்ச்சி

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் ஹலோவின் கொண்டாட்டத்தின் போது சேகரிக்கப்பட்ட சாக்கலேட்டுகளில் ஊசிகள் மற்றும் உலோகப் பின்ன்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மாகாண பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

டிரம்மென்ட்வில் மற்றும் சென்ட்-மார்செல் ஆகிய இரு வேறு பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கியூபெக் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதல் சம்பவத்தில் சாக்கலேட் ஒன்றிற்குள் தையல் ஊசியும், இரண்டாவது சம்பவத்தில் உலோகப் பின்னும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக இதனால் எவருக்கும் காயங்கள் எதுவுமே ஏற்படவில்லை எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் சில இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டாலும், இதுவரை இரண்டு சம்பவங்கள் மட்டுமே அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, பிள்ளைகள் சேகரித்து வரும் ஹலோவின் மிட்டாய்கள் மற்றும் சாக்கலேட்டுகளை உட்கொள்வதற்கு முன்னர் பெற்றோர் அவற்றைச் சரியாகப் பரிசோதிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், ஏற்கனவே பிரிக்கப்பட்டதாகவோ அல்லது சேதமடைந்ததாகவோ காணப்படும் மிட்டாய் உறைகள் குறித்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments