Sunday, November 22, 2026
spot_img
Homeகனடா செய்திகள்ஸ்டார்லிங்க் தேவையைக் குறைக்கும் கனடா!

ஸ்டார்லிங்க் தேவையைக் குறைக்கும் கனடா!

ஆர்க்டிக் பிராந்தியத்தில் இராணுவத் தகவல்தொடர்புகளுக்காக எலான் மஸ்கின் (Elon Musk) ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) செயற்கைக்கோள் சேவையின் மீதான சார்பைக் குறைக்கும் நோக்கில், மத்திய அரசாங்கம் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ‘டொமினியன் டைனமிக்ஸ்’ (Dominion Dynamics) நிறுவனம், கனடாவின் செயற்கைக்கோள் நிறுவனமான ‘டெலிசாட்’ (Telesat) உடன் 2.2 மில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

ஆர்க்டிக் பிராந்தியத்திற்காக இராணுவத் தரத்தில் வடிவமைக்கப்பட்ட தனித்துவமான தகவல்தொடர்பு இணைப்பாக இது அமையும் என எலியட் பென்ஸ் தெரிவித்தார்.

நாட்டின் இறைமையை வலுப்படுத்தும் பரந்த முயற்சியின் அங்கமாகவும், ஆளற்ற போர் விமானத்தை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்க்டிக் பிராந்தியத்திற்கு ஏற்ற செயற்கைக்கோள் மற்றும் தன்னியக்க இராணுவத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

உக்ரைனில் மஸ்கின் ‘ஸ்டார்ஷீல்ட்’ (Starshield) சேவைக்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட்டதால் நேரடி உயிரிழப்புகள் ஏற்பட்டதாகப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) கூறியுள்ளார்.

இதனால், அமெரிக்கத் தொழில்நுட்பத்தின் மீதான கனடாவின் சார்பைக் குறைப்பதற்காக, ஸ்டார்லிங்க் சேவையிலிருந்து கனடா விலகிச் செல்லும் எனவும் பிரதமர் கார்னி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments