Sunday, June 7, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகை தபு ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்தவர். இன்று வரை ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழில் கடந்த 2000ம் ஆண்டில் வெளியான கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் மற்றும் அதே ஆண்டு வெளியான சினேகிதியே படங்களில் நடித்தார். அதன்பிறகு தமிழில் இதுவரை நடிக்கவில்லை. தற்போது 25 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் நடிக்கிறார் தபு.

இயக்குனர் பூரி ஜெகநாத் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் புதிய படம் உருவாகிறது . தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தை பூரி ஜெகநாத் மற்றும் சார்மி கவுர் இருவரும் தயாரிக்கின்றனர். இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தபு இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments