Wednesday, September 30, 2026
spot_img
Homeபொது செய்திகள்வட்ஸ்அப்பில் இனி மின்சாரம், எரிவாயு கட்டணங்களை செலுத்தலாம்

வட்ஸ்அப்பில் இனி மின்சாரம், எரிவாயு கட்டணங்களை செலுத்தலாம்

வட்ஸ்அப் செயலி மூலம் மின்சாரம், எரிவாயு, ஃபாஸ்டேக், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை செலுத்தும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பாரத் பில் கட்டண முறையின் உதவியுடன் 30 பிரிவுகளின் கீழ் 22,722-க்கும் மேற்பட்ட சேவை நிறுவனங்களின் கட்டணங்களை வட்ஸ்அப் செயலியில் இருந்தே செலுத்த முடியும்.

இதற்காக யுபிஐ, பற்று அட்டை மற்றும் கடன் அட்டை உள்ளிட்ட பல்வேறு கட்டண முறைகளைப் பயன்படுத்த முடியும். மின்சாரக் கட்டணம், எரிவாயு இணைப்பு கட்டணம், குடிநீர் கட்டணம், ஃபாஸ்டேக், காப்பீட்டு தவணை மற்றும் கடன் தவணை உள்ளிட்டவற்றை செலுத்தும் வசதி இதில் இடம்பெற்றுள்ளது.

வட்ஸ்அப் செயலியில் உள்ள ரூபாய் குறியீட்டைத் தேர்வு செய்து, செலுத்த வேண்டிய கட்டண வகையைத் தெரிவு செய்து வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை இணைத்த பின்னர் கட்டணத்தை செலுத்தலாம்.

மேலும், கட்டணங்களைப் பாதுகாப்பாக செலுத்துவதற்காக தனிப்பட்ட கடவுச்சொல்லை அமைத்துக்கொள்ள முடியும். ஒரே வட்ஸ்அப் கணக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளையும் இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் இருந்து வெளியேறாமலேயே அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்தும் வகையில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments