Tuesday, September 22, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்ராணி முகர்ஜியின் தாயார் காலமானார்

ராணி முகர்ஜியின் தாயார் காலமானார்

 

பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் தாயாரும், பின்னணி பாடகியுமான கிருஷ்ணா முகர்ஜி (75) இன்று (22) மதியம் காலமானார்.

பெங்காலி திரையுலகில் பணியாற்றிய கிருஷ்ணா முகர்ஜி, திரைப்பட இயக்குநரும் ஃபில்மாலயா ஸ்டுடியோஸின் நிறுவனர்களில் ஒருவருமான ராம் முகர்ஜியை திருமணம் செய்திருந்தார். ராம் முகர்ஜி கடந்த 2017ஆம் ஆண்டு காலமானார்.

ராணி முகர்ஜியின் திரையுலகப் பயணத்தில் அவரது தாயார் முக்கிய பங்காற்றியிருந்ததாக பல நேர்காணல்களில் அவர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணா முகர்ஜியின் மறைவு தொடர்பில் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், அவரது மறைவால் குடும்பத்தினர் ஆழ்ந்த துயரத்தில் இருப்பதாகவும், இந்த துயரமான நேரத்தில் தங்களது தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments