Saturday, October 3, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மஸ்கெலியாவில் நடைபெற்ற நூறு மூத்தோரை கௌரவிக்கும் நிகழ்வு

மஸ்கெலியாவில் நடைபெற்ற நூறு மூத்தோரை கௌரவிக்கும் நிகழ்வு

சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் தமது வாழ்க்கையின் பல தசாப்தங்களை அர்ப்பணித்த நூறு மூத்த பிரஜைகளை கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வு, சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினமான ஒக்டோபர் 01ஆம் திகதியை முன்னிட்டு மஸ்கெலியா குடா மஸ்கெலிய பௌத்த நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

குடா மஸ்கெலிய கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு சர்வமத அனுஷ்டானங்கள் மற்றும் தர்மப் போதனையுடன் ஆரம்பமானது.

நிகழ்வில் கலந்துகொண்ட மூத்த பெண்மணி 99 வயதுடையவராவார். கடந்த காலத்தில் ஸ்ரீ பாத யாத்திரைக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாகப் பணியாற்றிய இவர், இந்நிகழ்வில் கலந்துகொண்டமை சிறப்பான உணர்வுபூர்வ தருணமாக அமைந்தது.

தொடர்ந்து நடைபெற்ற சிநேகபூர்வ சந்திப்பில் மூத்தோர் தமது இளமைக்கால நினைவுகளையும் வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். அவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்றனர். மேலும், கலந்துகொண்ட மூத்தோரிடையே குலுக்கல் நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

நோர்வூட் உதவி பிரதேச செயலாளர் ஜீ. ஜீ. ஆர். சந்தமாலி, மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி, மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பிரதேச மக்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மூத்தோருக்கு பரிசுகளையும் பொழுதுபோக்கையும் வழங்குவதைக் கடந்துச் சென்று, அவர்களின் வாழ்க்கை அனுபவங்களுக்கு மதிப்பளித்து, அவர்களுடன் உரையாடி, அவர்கள் சமூகத்திற்கு இன்னும் பெறுமதியானவர்கள் என்பதை உணர்த்திய இந்நிகழ்வு, நூறு மூத்தோரின் உள்ளங்களில் மகிழ்ச்சியையும் மரியாதையையும் இனிய நினைவுகளையும் ஏற்படுத்திய மனிதநேயமிக்க சமூகப் பணியாக அமைந்தது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments