கொட்டகலை லொக்கில் தோட்டப் பகுதியில் புதிய மர ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் இன்று (06) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மர ஆலை அமைக்கப்படவுள்ள கட்டுமானப் பகுதியில் ஒன்றுகூடிய தொழிலாளர்கள், பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
குறித்த பகுதியில் தேவாலயம், கோயில், தேயிலை கொழுந்து கொள்வனவு நிலையம் மற்றும் தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதி ஆகியவை அமைந்துள்ளதாகவும், மர ஆலை அமைக்கப்பட்டால் வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


