Sunday, October 4, 2026
spot_img
Homeஉலக செய்திகள்மத்திய கிழக்கிற்கு 3ஆவது விமானம் தாங்கி போர்க்கப்பலை அனுப்பும் அமெரிக்கா

மத்திய கிழக்கிற்கு 3ஆவது விமானம் தாங்கி போர்க்கப்பலை அனுப்பும் அமெரிக்கா

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்குப் பின்னர் ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை அதிகரித்து வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கில் நிலைநிறுத்துவதற்காக 3ஆவது விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட்’ கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இந்தக் கப்பல் இம்மாத இறுதிக்குள் மத்திய கிழக்கை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ‘யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ்’ மற்றும் ‘யுஎஸ்எஸ் ஜார்ஜ் வொஷிங்டன்’ ஆகிய இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், மத்திய கிழக்கில் கூடுதலாக சுமார் 10,000 அமெரிக்க இராணுவ வீரர்களை நிலைநிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை சுமார் 20,000 ஆக அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

இதேவேளை, பசிபிக் பெருங்கடலில் செயல்பட்டு வந்த ‘யுஎஸ்எஸ் ஜார்ஜ் வாஷிங்டன்’ கப்பல், ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ கப்பலுக்கு பதிலாக மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய கிழக்கில் சுமார் 10,000 அமெரிக்க கடற்படை வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, போர்நிறுத்தம் தொடர்பாக ஈரான் முன்வைத்திருந்த முன்மொழிவை டிரம்ப் நிராகரித்திருந்தார்.

நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின்போது, ஈரான் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான உடன்பாட்டை மேற்கொள்ள விரும்புவதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments