Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்போதைப்பொருட்களுடன் 3,387 பேர் கைது!

போதைப்பொருட்களுடன் 3,387 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 3,387 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 1085 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 1125 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 24 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 1041 பேரும், கஞ்சா செடிகளுடன் 47 பேரும், போதை மாத்திரைகளுடன் 59 பேரும், சட்டவிரோத சிகரட்டுகளுடன் 06 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 03 கிலோ 869 கிராம் 384 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 02 கிலோ 119 கிராம் 524 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 97 கிராம் 18 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருளும், 166 கிலோ 218 கிராம் 155 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 339,739 கஞ்சா செடிகளும், 7562 போதை மாத்திரைகளும், 196 சட்டவிரோத சிகரட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments