Sunday, September 27, 2026
spot_img
Homeஉலக செய்திகள்நேபாளத்தில் தொடரும் கனமழை - கடந்த 72 மணிநேரத்தில் 14 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் தொடரும் கனமழை – கடந்த 72 மணிநேரத்தில் 14 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் வங்கக்கடலில் உருவான குறைந்தகாற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகக் கடந்த சில நாட்களாகத் தொடர் கனமழை பெய்து வருகிறது.

இதனால் அந்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பு உருவாகியுள்ளது.

குறிப்பாக கடந்த 72 மணிநேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழை தொடர்பான அனர்த்தங்களில் சிக்கி இதுவரை குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDRRMA) மற்றும் உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நிலச்சரிவால் மியாக்டி (Myagdi) மாவட்டத்தில் 4 பேரும், பாக்புங் (Baglung) மாவட்டத்தில் 4 பேரும் பலியாகியுள்ளனர்.

காளிகண்டகி மற்றும் நாராயணி உள்ளிட்ட முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்மட்டம் 9 மீட்டரைத் தாண்டி ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் ஆற்றுப் படுகைகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

மேலும், நாட்டின் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களில் நேபாள ராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்மண்டு உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments