Tuesday, July 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மேலும் இரு அதிகாரிகள் மரணம்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மேலும் இரு அதிகாரிகள் மரணம்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (13) மற்றும் இன்று (14) அதிகாலை வேளையில் குறித்த இரு சிறைச்சாலை அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 21 சிறைக்கைதிகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, பதிவாகியுள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

குறித்த மோதலில் காயமடைந்த மேலும் சில சிறைக்கைதிகளும் அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments