Tuesday, June 16, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்நியூசிலாந்து - ஈரான் போட்டி சமநிலை

நியூசிலாந்து – ஈரான் போட்டி சமநிலை

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘ஜி’ பிரிவில் இன்று நடைபெற லீக் ஆட்டத்தில் ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகள் லொஸ் ஏஞ்சல்ஸில் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் எலிஜா ஜஸ்ட் கோல் அடித்து நியூசிலாந்தை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தார்.

32-வது நிமிடத்தில் ராமின் ரெஸாயியன் அடித்த கோலின் மூலம் ஈரான் 1-1 என சமன் செய்தது.

இதனால் முதல் பாதி சமநிலையுடன் நிறைவடைந்தது….

ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் எலிஜா ஜஸ்ட் தனது இரண்டாவது கோலை பதிவு செய்ய நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

64-வது நிமிடத்தில் முகம்மது மொஹேபி கோல் அடித்து ஈரானை மீண்டும் சமநிலைக்கு கொண்டு வந்தார்.

இதனால் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

ஆட்ட நேர முடிவில் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments