நிதி தூய்தாக்கல் தடுப்புச் (திருத்தச்) சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று (9)நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பின் போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 02வாக்குகளும் அளிக்கப்பட்டன.
எதிர்க்கட்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எம்.பியான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பியான செல்வம் அடைக்கலநாதன் ஆகிய இருவரும் எதிராக வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை.


