Saturday, July 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று (10) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி,மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், மொனராகலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments