Wednesday, June 24, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்நடிகர் ரவி மோகன் வீட்டில் நகை திருட்டு!

நடிகர் ரவி மோகன் வீட்டில் நகை திருட்டு!

நகை திருட்டு தொடர்​பாக, நடிகர் ரவி மோகன் வீட்​டில் பணிப்​பெண்​கள் சிறை வைக்​கப்​பட்​ட​தாக புகார் எழுந்​துள்​ளது. சென்னை நீலாங்​கரை​யில் நடிகர் ரவி மோகன் வீடு உள்​ளது. அங்கு சிலர் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் பொலிஸ் கட்​டுப்​பாட்டு அறைக்கு ஒரு​வர் தொடர்பு கொண்​டு, நடிகர் ரவி மோகன் வீட்​டுக்கு வேலைக்​குச் சென்ற தனது தாய், மகன் வீடு திரும்​ப​வில்லை என்​றும், அவர்​களை தொடர்​பு​கொள்ள முடிய​வில்லை என்​றும் புகார் அளித்​த​தாக தெரி​கிறது.

இதையடுத்து நீலாங்​கரை பொலிஸார் உடனடி​யாக அங்கு சென்று விசா​ரணை மேற்​கொண்​டனர். அப்​போது வீட்​டுக்​குள் 2 பணிப்​பெண்​கள் மற்​றும் அவர்​களு​டன் வந்​திருந்த சிறு​வன் ஒரு​வன் இருந்​தது தெரிய​வந்​தது.

இதுகுறித்து பொலிஸார் நடிகர் ரவி மோக​னிடம் விசா​ரித்​த ​போது, வீட்​டில் பணி​யாற்றி வந்த பெண்​கள் நகை திருடிய​தாக சந்​தேகம் ஏற்​பட்​ட​தால், அது தொடர்​பாக அவர்​களிடம் விசா​ரித்து வந்​த​தாக அவரது தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​ட​தாக தெரிவிக்கப்படு​கிறது.

அப்​போது பொலிஸார், பொது​மக்​கள் யாராக இருந்​தா​லும் தாங்​களாகவே விசா​ரணை நடத்தி ஒரு​வரை வீட்​டில் தடுத்து வைக்​கக்​கூ​டாது என்​றும், ஏதேனும் புகார் இருந்​தால் பொலிஸ் நிலை​யத்​தில் தெரிவிக்க வேண்​டும் என்​றும் அறி​வுறுத்​தினர்.

மேலும் நகை திருட்டு தொடர்​பாக உரிய புகார் அளித்​தால் சட்​டப்​படி விசா​ரணை நடத்​தப்​படும் என தெரி​வித்த பொலிஸார் வீட்டிலிருந்த பணிப்​பெண்​கள், அவர்​களு​டன் இருந்த சிறு​வனை அனுப்பி வைத்​த​தாக தெரிவிக்கப்படு​கிறது. இந்த சம்​பவம் தொடர்​பாக நீலாங்​கரை பொலிஸார் தொடர்ந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments