உலகக் கோப்பை கால்பந்து தொடரில் உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் அணி அபார வெற்றி பெற்றது.
ஹூஸ்டன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியின் 6-ஆவது நிமிடத்திலேயே கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து அசத்தினார்.
ஆட்டத்தின் 17-ஆவது நிமிடத்தில் போர்த்துக்கள் அணி மற்றொரு கோல் அடித்தது. நுனோ மென்டெஸ் கோல் அடிக்க போர்த்துக்கல் அணி 2-0 என தனது ஆதிகத்தை தொடர்ந்தது.
பிறகு ஆட்டத்தின் 39-ஆவது நிமிடத்தில் ரொனால்டோ தனது அணிக்கு மற்றொரு கோல் அடிக்க போர்த்துக்கல் 3-0 என வலுவான முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 60-ஆவது நிமிடத்தில் உஸ்பெகிஸ்தான் அணியின் அப்துவோஹிட் ஓன் கோல் அடிக்க போர்த்துக்கல் அணி 4-0 என முன்னேற்றம் கண்டது.
பிறகு ஆட்டத்தின் 87-ஆவது நிமிடத்தில் ரஃபேல் லௌ கோல் அடிக்க போர்த்துக்கல் அணி 5-0 என முன்னேறியது.
ஆட்டத்தின் இறுதிவரை உஸ்பெகிஸ்தான் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதன் காரணமாக போட்டியில் போர்ச்சுகல் அணி 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.


