மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகன் நடிகர் கார்த்திக் சபேஷ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
தமிழ் திரைப்பட நடிகர் கார்த்திக் சபேஷ் (37)உடல்நலக் குறைவால் மரணமடைந்த செய்தியை குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர்களான சபேஷ் மற்றும் முரளி இருவரும் சபேஷ் – முரளி என இரட்டை இசையமைப்பாளர்களாக பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.
சமுத்திரம் படத்தில் இசையமைக்க ஆரம்பித்த இருவரும் நைனா, நைனா, தவமாய் தவமிருந்து, இம்சை அரசன் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், பொக்கிஷம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு இசையமைப்பாளர் சபேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இந்நிலையில், 37 வயதே ஆன அவரது மகனும் நடிகருமான கார்த்திக் சபேஷ் உடல்நலக்குறைவு காரணமாக மரணித்துள்ளது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேவா மறைந்த துக்கமே தீரல: கடந்த ஆண்டு தனது தம்பி சபேஷ் மறைந்த துக்கத்தால் மனதளவில் உடைந்துப் போயிருந்த தேவா 75 வயதான நிலையில், நேற்று முன் தினம் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், காலமானார். அவரது உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது.
தேவா மறைந்த துக்கமே தீராத நிலையில், அவர்களின் குடும்பத்தில் அடுத்த அதிர்ச்சி மரணம் ஏற்பட்டுள்ளது.
கார்த்திக் சபேஷ் மரணம்: தம், வல்லவன், பட்டத்து யானை, குளிர் 100 உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் இசையமைப்பாளர் சபேஷின் மகன் கார்த்திக் சபேஷ் நடித்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார் என்கிற அறிவிப்பை குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.


