Tuesday, October 20, 2026
spot_img
Homeகனடா செய்திகள்ஆல்பர்ட்டா மாகாணம் பிரிவது தொடர்பான வாக்கெடுப்பு முடிவுகள்

ஆல்பர்ட்டா மாகாணம் பிரிவது தொடர்பான வாக்கெடுப்பு முடிவுகள்

Alberta referendum results: கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரிவது தொடர்பான வாக்கெடுப்பு முடிவுகள் வெளியானவண்ணம் உள்ளன.

கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரிவது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இந்நிலையில், வாக்கெடுப்பு முடிவுகள் வெளியானவண்ணம் உள்ளன.

கனேடிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா மாகாணம், இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு மாகாணமாகும்.

ஆனால், கனடாவுக்கு தாங்கள் தங்கள் வளம் மூலம் பெரிய அளவில் பங்களிப்பைச் செய்தும், பதிலுக்கு ஃபெடரல் அரசு தங்களை சரியாக கவனிப்பதில்லை, தங்கள் கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் எடுபடவில்லை என்னும் கருத்து ஆல்பர்ட்டா மக்களிடையே நிலவிவருகிறது.

ஆகவே, வளம் நிறைந்த ஆல்பர்ட்டா மாகாணம், கனடாவிலிருந்து பிரிந்து தன்னைத்தான் நிர்வகிக்கவேண்டும் என ஆல்பர்ட்டா மக்களில் ஒரு பிரிவினர் கருதுகிறார்கள்.

இந்நிலையில், நேற்று, அதாவது, அக்டோபர் மாதம் 19ஆம் திகதி, அது தொடர்பில் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.

அதாவது, ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் இணைந்தே இருக்கவேண்டுமா, அல்லது, தனியாக பிரிவது தொடர்பில் மற்றொரு வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமா என அந்த வாக்கெடுப்பில் மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியானவண்ணம் உள்ளன.

மக்களிலும், அரசியல்வாதிகளிலும் ஒரு பிரிவினர் எதிர்பார்த்தபடியே அல்லது விரும்பியபடியே, பெரும்பாலான மக்கள் கனடாவுடன் இணைந்தே இருக்கவேண்டும் என்றே வாக்களித்துள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், அந்த வாக்கெடுப்பில், மக்களிடம் ஒரு கேள்வித்தாள் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் கேள்வித்தாளில் 10 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. 10ஆவது கேள்விதான், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் இணைந்தே இருக்கவேண்டுமா, அல்லது, தனியாக பிரிவது தொடர்பில் மற்றொரு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா என்னும் கேள்வி ஆகும்.

சமீபத்திய தகவலின்படி, அந்தக் கேள்விக்கு, 76.5 சதவிகிதம் மக்கள், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் இணைந்தே இருக்கவேண்டும் என்றே வாக்களித்துள்ளார்கள்.

23.5 சதவிகிதம் பேர் மட்டுமே, கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் தனியாக பிரிவது தொடர்பில் மற்றொரு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வாக்களித்துள்ளார்கள்.

ஆக, மற்ற 9 கேள்விகள் குறித்த முடிவுகள் வெளியாகவேண்டியுள்ளது என்றாலும், இறுதி முடிவு எப்போது வெளியானாலும், கனடாவுடன் இணைந்திருப்பது அல்லது பிரிவது தொடர்பான விடயத்தின் முடிவுகள் மாறுவதற்கான வாய்ப்பில்லை.ஆல்பர்ட்டா மாகாணம் பிரிவது தொடர்பான வாக்கெடுப்பு முடிவுகள்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments