Saturday, September 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தெஹிவளை குண்டுவெடிப்பின் அதிர்ச்சி பின்னணி

தெஹிவளை குண்டுவெடிப்பின் அதிர்ச்சி பின்னணி

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்று மீது நேற்றைய தினம் (11) அதிகாலை நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் தவறதலாக நடந்நொன்று எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இத்தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தையும் காயமடைந்து தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் நபரின் சகோதரரின் வீட்டை இலக்கு வைத்தே குறித்த குண்டுத் தாக்குதலை நடத்தச் சென்று, வீடு மாறியதன் காரணமாகவே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த இரு குழந்தைகளின் உடல்கள் இன்று (12) பிற்பகல் அவர்களின் வீட்டிற்கு எடுத்துவரப்படவுள்ளன.

இதனிடையே, இன்று மொரட்டுவ, கட்டுபெத்த பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேல்மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதிவத்த குறிப்பிட்டார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குற்றக் கும்பல்கள், பொலிஸாரையோ அல்லது பொதுமக்களையோ மீறிச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்தார்.

பாதாள உலகக் கும்பல்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்காகப் புதிய உத்தியாகக் கைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments