லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், அங்கு பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், லண்டன் வாழ் தமிழர்களை சந்தித்து கலந்துரையாடும் விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
முதலமைச்சர் விஜய் தங்கியிருக்கும் நட்சத்திர விடுதியில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, லண்டன் வாழ் தமிழர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன், அவருடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


