Saturday, September 12, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவை அண்மித்த கடற்பகுதியில் இன்று (12) அதிகாலை 6.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.23 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, ஜகார்த்தாவின் ஆயிரம் தீவுகள் பகுதிக்கு வடகிழக்கே 69 கிலோமீட்டர் தொலைவில், ஜாவா கடலில் 368 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக இந்தோனேசிய வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் முகமை (BMKG) தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் 5.9 ரிச்டர் அளவாக பதிவான நிலநடுக்கத்தின் அளவு, மேலதிக ஆய்வுகளுக்குப் பின்னர் 6.5 ரிச்டராக திருத்தப்பட்டதாக BMKG தெரிவித்துள்ளது.

ஜகார்த்தா உள்ளிட்ட பகுதிகளிலும், ஜாவா மற்றும் சுமாத்ராவின் சில பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. பான்டென், மேற்கு ஜாவா மற்றும் தெற்கு சுமாத்ராவின் தங்கமுஸ் பகுதிகளில் நில அதிர்வுகள் தீவிரமாக உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments