தென்னாபிரிக்காவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் உள்ள கிராமப்புற நகரமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அருகருகே அமைந்திருந்த இரு வீடுகளில் இருந்தவர்களை இலக்குவைத்து இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்லெண்டா மேத்தே தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட பின்னர் சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
தென்னாபிரிக்காவில் அண்மைக்காலமாக குழு மோதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


