Wednesday, July 1, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தானசாலை வரிசையில் தாக்குதல்: ஐவர் கைது

தானசாலை வரிசையில் தாக்குதல்: ஐவர் கைது

மாலபே பகுதியில் இடம்பெற்ற தானசாலை ஒன்றில் வரிசையில் நிற்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொசன் பூரணை தினத்தன்று மாலபே நகரில் உள்ள தானசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து, இளைஞர் ஒருவரை ஒரு குழுவினர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று(30) மாலபே காவல்துறையினருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, கொட்டலாவல, பட்டியவத்தை வீதியைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய ஐந்து சந்தேகநபர்கள் மாலபே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

தொடர்பான மேலதிக விசாரணைகளை மாலபே காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments