Wednesday, July 1, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்எம்பாப்பே இரட்டை கோல்: 16 அணிகளின் சுற்றுக்குள் பிரான்ஸ்

எம்பாப்பே இரட்டை கோல்: 16 அணிகளின் சுற்றுக்குள் பிரான்ஸ்

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதி 16 அணிகள் கொண்ட சுற்றுக்கு பிரான்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

இறுதி 32 அணிகள் சுற்றில் நடைபெற்ற போட்டியொன்றில் பிரான்ஸ் அணி 3- 0 என்ற கோல் கணக்கில் சுவீடனைத் தோற்கடித்தது.

க்ளியன் எம்பாப்பே இப்போட்டியில் இரட்டை கோல்களைப் பதிவு செய்தார்.

போட்டியின் 43ஆவது நிமிடத்தில் எம்பாப்பே பிரான்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்ததுடன், 53ஆவது நிமிடத்தில் பிராட்லி பார்கோலா இரண்டாவது கோலை அடித்தார்.

பின்னர் 74ஆவது நிமிடத்தில் மீண்டும் அதிரடி காட்டிய எம்பாப்பே, மற்றுமொறு  கோலை பதிவு செய்ய பிரான்ஸ் அணி 3 – 0 என தொடர்ந்தும் முன்னிலையில் இருந்தது.

ஆட்டநேரம் முடிவடையும் வரையில் சுவீடன் அணி எந்தவொரு கோலையும் அடிக்கவில்லை.

பிரான்ஸ் அணி 3-0 என போட்டியை வென்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments