Tuesday, June 30, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்"கொழும்பு மரதன்" போட்டிக்கான பதிவுகள் ஆரம்பம்

“கொழும்பு மரதன்” போட்டிக்கான பதிவுகள் ஆரம்பம்

இலங்கையை சர்வதேச விளையாட்டு சுற்றுலா மையமாக மாற்றும் “கொழும்பு மரதன் 2026” செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சினால் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “கொழும்பு மரதன்” (Colombo Marathon) ஓட்டப்பந்தயம் 2026 செப்டம்பர் மாதம் கொழும்பில் நடைபெறும் என 2026 ஏப்ரல் 27 அன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

4,000-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ள இந்த மரதன் போட்டி, ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைவதற்கு இலங்கை வழங்கும் பங்களிப்பை வெளிப்படுத்தும் ஒரு காரணியாகவும் அமையும்.

கொழும்பு மரதன் போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பமாகது.

முதல் தடவையாக நடைபெறவுள்ள கொழும்பு மரதன் (Colombo Marathon) போட்டிக்கான பதிவுகள் தற்பொழுது ஆரம்பமாகிவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பதிவுகளுக்கு  – https://colombomarathon.lk

 

இந்த போட்டி ஐந்து பிரிவுகளின் கீழ் நடைபெறும்:

முழு மரதன் (42.195 கி.மீ.)
அரை மரதன் (21.097 கி.மீ.)

10 கி.மீ. ஓட்டப்பந்தயம்
5 கி.மீ. வினோத ஓட்டம் (Fun Run)
சிறுவர்களுக்கான மினி ஓட்டம் (1–2 கி.மீ.)

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments