Monday, June 15, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்கனடா - பொஸ்னியா போட்டி சமநிலையில் முடிவு

கனடா – பொஸ்னியா போட்டி சமநிலையில் முடிவு

2026 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில், கனடா மற்றும் பொஸ்னியா-ஹெர்சகோவினா அணிகளுக்கு இடையே இடம்பெற்ற போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இந்த போட்டியின் 21வது நிமிடத்தில் பொஸ்னியா வீரர் ஜொவோ லுகி கோல் அடித்தார்.
இதனால் ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் பொஸ்னியா அணி முன்னிலை வகித்தது.
பின்னர், ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் கனடா வீரர் செலி லரின் கோல் அடித்தார்.
எனினும், ஆட்டநேரம் முடியும் வரை இரு அணிகளும் மேலதிகமாக கோல் எதனையும் பெறாதமையால், 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றன.
இதனால் போட்டி சமநிலையில் முடிந்ததுடன், தலா 1 புள்ளியுடன் குழு பி பிரிவில் முதல் இடத்தில் கனடாவும், 2வது இடத்தில் பொஸ்னியாவும் இடம்பெற்றுள்ளன.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments