Tuesday, October 6, 2026
spot_img
Homeஉலக செய்திகள்கருங்கடலில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு

கருங்கடலில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

கருங்கடலில் இந்தியர்கள் மற்றும் அஜர்பைஜான் நாட்டினர் பயணித்த துருக்கிக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மீது ரஷ்ய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதில், கப்பலின் கேப்டன் உயிரிழந்துள்ளார். மேலும், 11 மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமிர் ஸெலென்ஸ்கி, கருங்கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பதற்றத்தைத் தணிப்பதற்கும் உக்ரைன் தொடர்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்மொழிந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

உலக உணவுப் பாதுகாப்பை மீட்டெடுக்க சர்வதேச அழுத்தம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இரு தரப்புடனும் இந்தியா தீவிர பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments