Friday, September 25, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனேடிய அரசு சவூதி அரசுடன் கலந்துரையாடி அனோஜனுக்கு பொதுமன்னிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும் – தமிழர் பேரவை

கனேடிய அரசு சவூதி அரசுடன் கலந்துரையாடி அனோஜனுக்கு பொதுமன்னிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும் – தமிழர் பேரவை

கனேடிய அரசானது சவூதி அரசுடன் கலந்துரையாடி, அனோஜனுக்கு பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கோ அல்லது மரண தண்டனையை இடைநிறுத்துவதற்கோ சகல வழிகளிலும் முயலவேண்டும் என கனேடிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கடந்த மாதத் தொடக்கத்தில் சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் 5 வருடகால சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்ட இலங்கையரான சிவராசா அனோஜனின் மேன்முறையீட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் கனேடிய அரசாங்கத்தின் தலையீட்டைக் கோரி கனேடிய தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

தற்போது சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் இலங்கைத் தமிழரான சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரும் அவரது குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களுடனான முழுமையான உணர்வொற்றுமையை வெளிப்படுத்துகின்றோம்.

காலதாமதமின்றிச் செயலாற்றவேண்டிய இத்தருணத்தில் கனேடிய அரசின் மனிதாபிமான அடிப்படையிலான உடனடித் தலையீட்டைக் கோரி, பிரதமர் மார்க் கார்னி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோரிடம் நாம் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

மனித உரிமைகளை முன்னிறுத்துவதிலும், உலகளாவிய ரீதியில் மரணதண்டனையை முற்றாக இல்லாதொழிப்பதற்கான பிரசாரத்திலும் முன்நின்று செயலாற்றிய கனடாவின் குரல், இவ்விடயத்தில் கனதியானதாக அமையும் என நம்புகிறோம்.

மனித உரிமைகள், நீதி மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான பாதுகாப்பு ஆகிய விடயங்களில் அர்ப்பணிப்புடன் செயலாற்றிவரும் அமைப்பான நாம், அனோஜனின் உயிருக்கு ஏற்பட்டிருக்கும் உடனடி அச்சுறுத்தல் குறித்து மிகுந்த கவலையடைந்திருக்கிறோம்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments