Monday, November 23, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் திருடப்பட்ட 37 வாகனங்களுடன் சந்தேகநபர்கள் கைது

கனடாவில் திருடப்பட்ட 37 வாகனங்களுடன் சந்தேகநபர்கள் கைது

கனடாவின் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் சுமார் 3.6 மில்லியன் டொலர் பெறுமதியான குறைந்தது 37 டிராக்டர்கள் திருடப்பட்டுக் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செமி-டிராக்டர்கள் மற்றும் 53 அடி நீளமான டிரெய்லர்களை இலக்கு வைத்துச் செயற்படும் திட்டமிட்ட திருட்டு மற்றும் கடத்தல் வலையமைப்பு குறித்து விசாரணை நடத்துவதற்காக, கடந்த ஓகஸ்ட் மாதம் ‘புரொஜெக்ட் நாஷ்வில்’ என்ற விசேட நடவடிக்கையை ஆரம்பித்ததாக யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வலையமைப்பில் ஆறு நபர்கள் ஈடுபட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், அவர்கள் திருடப்பட்ட வாகனங்களை கிரேட்டர் டொராண்டோ பகுதி மற்றும் வட அமெரிக்காவின் ஏனைய பகுதிகளிலுள்ள போக்குவரத்து நிறுவனங்களுக்கு அனுப்பி வந்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கனடாவில் திருடப்பட்ட 37 வாகனங்களுடன் சந்தேகநபர்கள் கைது | 4 Brampton Suspects Charged After 36 Million

இதனையடுத்து, கடந்த ஒக்டோபர் மாதம் பிராம்ப்டன் பகுதியிலுள்ள பாரவூர்தி தரிப்பிடமொன்றில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது, திருடப்பட்ட 17 டிராக்டர்கள் மற்றும் 20 டிரெய்லர்கள் மீட்கப்பட்டன.

அவற்றில் சில வாகனங்களின் அடையாள இலக்கங்கள் மாற்றப்பட்டிருந்ததுடன், பல வாகனங்களில் புதிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு அடையாளம் மாற்றப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பிராம்ப்டன் பகுதியிலுள்ள மூன்று வீடுகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுசூதன் அத்வால் (35), சரண்தீப் அத்வால் (41), குர்லால் சிங் (30) மற்றும் அம்ரித்ஷேர் சிங் (28) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நால்வருக்கும் எதிராக மொத்தமாக 60 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்களான குர்லால் சிங் (35) மற்றும் ப்ரீதம் ரத்தன் (32) ஆகியோரைத் தேடி வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

34 குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்பட்டு வரும் குறித்த இருவரும் சட்ட ஆலோசனை பெற்று காவல்துறையில் சரணடையுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments