ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளை கனேடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) வரவேற்கவுள்ள நிலையில், இரு தரப்பு உச்சிமாநாட்டின் கூட்டறிக்கை வரைவில் ‘இணை உறுப்புரிமை’ (Associate Member) என்ற பதமானது தவிர்க்கப்பட்டுள்ளது.
கனடாவில் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய மற்றும் ஆழமான உறவை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தரப்பில் கனடாவிற்கு இணை உறுப்புரிமை வழங்குவது குறித்து பேசப்பட்ட போதிலும், தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள வரைவு அறிக்கையில் அத்தகைய வார்த்தைகள் எந்த வித இடமும் பெறவில்லை.
இந்த உறவின் பெயர்களை விட, இரு நாடுகளின் வர்த்தக மற்றும் கூட்டுறவில் இது ஏற்படுத்தும் மாற்றமே முக்கியமானது எனப் பிரதமர் மார்க் கார்னி சுட்டிக்காட்டியுள்ளார்.


