Sunday, June 7, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஐ.பி.எல் - மீண்டும் கிண்ணம் வென்றது பெங்களூர் அணி

ஐ.பி.எல் – மீண்டும் கிண்ணம் வென்றது பெங்களூர் அணி

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ச்சியாக இரண்டாவது தடவையும் கிண்ணம் வென்றது.

அகமதாபாத் மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்ற 19வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐந்து விக்கட்டுகளால் வெற்றிபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதை அடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.
பின்னர் 156 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய பெங்களூர் அணி 18 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 161 ஒரு ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.
துடுப்பாட்டத்தில் பெங்களூர் அணி சார்பில் விராட் கோலி 42 பந்துகளில் ஒன்பது 4 ஓட்டங்கள் மூன்று 6 ஓட்டங்கள் அடங்களாக 75 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments