Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கடுமையாகும் எரிபொருள் QR நடைமுறை - அமைச்சர் புதிய அறிவித்தல்

கடுமையாகும் எரிபொருள் QR நடைமுறை – அமைச்சர் புதிய அறிவித்தல்

நடைமுறையிலுள்ள எரிபொருள் QR முறைமையை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகத் துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்

ஏற்கனவே QR முறைமை மற்றும் கோட்டா முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் எரிபொருள் நுகர்வில் குறிப்பிடத்தக்களவு குறைப்பை ஏற்படுத்த முடிந்த போதிலும், அது நாட்டின் தேவைக்கான மட்டத்திற்கு வரவில்லை.

தற்போது உலக சந்தையில் எரிபொருளின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதால், பெருமளவிலான வெளிநாட்டு நாணயம் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஒப்பீட்டு ரீதியாகப் பார்த்தால், கடந்த ஜனவரி மாதத்தில் 186 மில்லியனாகவும், பெப்ரவரி மாதத்தில் 97 மில்லியனாகவும் இருந்த எரிபொருள் செலவினம், மே மாதமாகும்போது வெளிநாட்டு நாணயமாக 524 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

நாட்டை விட்டு வெளியேறும் டொலர்களின் அளவைக் குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், அது ஒருபுறம் எதிர்காலத்தில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு வழிவகுப்பதுடன், ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, எதிர்காலத்தில் இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனமும் (CPC), டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து தற்போது நடைமுறையிலுள்ள QR முறைமையை மேலும் கடுமையான முறையில் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments