Thursday, November 19, 2026
spot_img
Homeகனடா செய்திகள்எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது!

எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள லாங்லி பகுதியில், கடந்த மாதம் எரிந்து கொண்டிருந்த வாகனமொன்றிற்குள் இருந்து மீட்கப்பட்ட சடலம் 25 வயதுடைய துஷார் ஷர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த கொலைப் புலனாய்வுக் குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி லாங்லி, ராலிசன் கிரெசண்ட் பகுதியில் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிவதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த அவசரப் பிரிவினர், தீயை அணைத்தபோது வாகனத்திற்குள் மனித உடல் எச்சங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இது குறித்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், உயிரிழந்த துஷார் ஷர்மாவிற்கு எவ்வித குற்றப் பின்னணியும் இல்லை எனவும், கனடாவில் அவருக்கு மிகக் குறைவான தொடர்புகளே இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தற்செயலாக நடந்த சம்பவமல்ல எனவும், திட்டமிடப்பட்ட கொலையாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கும் அதிகாரிகள், உயிரிழந்தவரின் வாழ்க்கை முறை மற்றும் சம்பவத்திற்கு முன்னரான நடவடிக்கைகள் குறித்து கனடா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அவரது குடும்பத்தினர், நண்பர்களிடம் விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் 1-877-551-4448 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது ihitinfo@rcmp-grc.gc.ca என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அறியத்தருமாறு புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments