Wednesday, September 23, 2026
spot_img
Homeஉலக செய்திகள்உலகளவில் ஈரான் விமான சேவைகளை முடக்க அமெரிக்கா எச்சரிக்கை!

உலகளவில் ஈரான் விமான சேவைகளை முடக்க அமெரிக்கா எச்சரிக்கை!

ஈரான் விமான நிறுவனங்களின் சர்வதேச செயல்பாடுகளை முடக்கும் வகையில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க கருவூலத் துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட், செப்டம்பர் 23ஆம் திகதி முதல் ஈரானிய விமான நிறுவனங்கள் உலகளவில் செயல்பட முடியாத நிலை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஈரானிய விமானங்களுக்கு எரிபொருள் வழங்குதல், விமான நிலையத்தில் தரையிறங்கும் மற்றும் தரைச் சேவைகளை வழங்குதல் அல்லது அவற்றுக்கான விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்தல் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவின் இரண்டாம் நிலைத் தடைகளுக்கு (secondary sanctions) உள்ளாகக்கூடும் என பெசென்ட் எச்சரித்துள்ளார். இதன் மூலம், அமெரிக்க டொலர் நிதி அமைப்பில் இருந்து அந்த நிறுவனங்கள் விலக்கப்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் விமானத் துறையை இலக்காகக் கொண்டு அமெரிக்க கருவூலத் துறை செப்டம்பர் 8ஆம் திகதி ஏற்கனவே புதிய தடைகளை அறிவித்திருந்தது. ஈரானின் விமானப் போக்குவரத்துத் துறைக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் 36 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அந்த நடவடிக்கையில் இலக்காக்கப்பட்டனர்.

பல ஆண்டுகளாக அமெரிக்கத் தடைகளால் ஈரானிய விமான நிறுவனங்கள் புதிய விமானங்கள், உதிரிப்பாகங்கள் மற்றும் பராமரிப்பு சேவைகளைப் பெறுவதில் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றன. புதிய நடவடிக்கைகள் சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களையும் பாதிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments