Tuesday, September 22, 2026
spot_img
Homeஉலக செய்திகள்“வலுக்கட்டாயமாக மக்களைப் பணிய வைக்க முடியாது” – ஈரான் ஜனாதிபதி

“வலுக்கட்டாயமாக மக்களைப் பணிய வைக்க முடியாது” – ஈரான் ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கவும், ஈரானின் நிலைப்பாடுகளை முன்வைக்கவும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்றதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பயணத்தைத் தொடங்கும் முன் பேசிய பெசெஷ்கியன், ஈரானிய மக்களின் குறைகள், நிகழ்ந்துள்ள குற்றங்கள் மற்றும் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கை ஆகியவற்றைத் தான் முன்வைக்கப் போவதாகக் கூறினார்.

அத்துடன், நாங்கள் பலமுறை பேச்சுவார்த்தை மேசைக்குச் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வாக்குறுதிகள் எவ்வாறு நிறைவேற்றப்படவில்லை என்பதையும், எழுத்துப்பூர்வ ஒப்பந்தங்கள் எவ்வாறு மீறப்பட்டன என்பதையும் உலகம் முழுவதுமே பார்த்தது என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுக்கட்டாயமாக மக்களைப் பணிய வைக்க முடியாது. காசா, பாலஸ்தீனம், சிரியா, ஏமன், ஈரான் மற்றும் பிற இடங்களில் நடப்பவை, உலக மக்கள் நேரில் காணும் யதார்த்தங்களையே காட்டுகின்றன என்று பெசெஷ்கியன் மேலும் கூறினார்.

ஈரானிய மக்களைப் பணிய வைக்கும் முயற்சியில் எதிரிகள் தங்களால் முடிந்தவரை தடைகளை உருவாக்குகிறார்கள். இராணுவ வழிகள் மூலம் தங்கள் நோக்கங்களை அடையத் தவறிய அவர்கள், இப்போது பிற வழிகளில் செயல்பட முயற்சிக்கின்றனர்.

எங்களை உள்ளிருந்தே பலவீனப்படுத்திப் பணிய வைப்பதற்காக, அவர்கள் தரை மற்றும் வான்வழிப் பாதைகளை அடைக்கிறார்கள். உள்நாட்டுப் பிளவுகளைத் தூண்டவும், ஊடகங்கள் மற்றும் இனக் குழுக்களைப் பயன்படுத்தவும் முயற்சிக்கிறார்கள்.

அத்துடன் எங்கள் பலவீனங்களை முடிந்தவரை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் முயல்கிறார்கள் என்று ஈரான் ஜனாதிபதி கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments