Sunday, June 7, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்மும்முனை தொடர்: இலங்கை A குழாத்தில் சிராஸ், வியாஸ்காந்த், மாதுளன்

மும்முனை தொடர்: இலங்கை A குழாத்தில் சிராஸ், வியாஸ்காந்த், மாதுளன்

இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் A அணிகள் பங்குபற்றும் உத்தியோகப்பற்றற்ற மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இலங்கை A அணிக்கும் இந்திய A அணிக்கும் இடையிலான இரண்டு உத்தியோகப்பற்றற்ற 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இலங்கை A அணி குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை A அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுழல்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த்தும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயது வேகப்பந்து வீச்சாளரான குகதாஸ் மாதுளனும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

குறித்த மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இந்திய A அணிக்கு எதிரான 2 போட்டிகளைக் கொண்ட உத்தியோகப்பற்றற்ற 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இலங்கை A அணியில் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஸ் இடம்பிடித்துள்ளார்.

எனினும், அண்மைக்காலமாக உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற இளம் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் சாருஜன் சண்முகநாதனுக்கு இலங்கை A அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஒருநாள் போட்டித் தொடருக்கான குழாம்

சஹான்ஆரச்சிகே – (தலைவர்), நிரோஷன்டிக்வெல்ல – உபதலைவர் / விக்கெட்காப்பாளர், அவிஷ்கபெர்னாண்டோ, நுவனிந்துபெர்னாண்டோ, சதீரசமரவிக்ரம, அஹான்விக்ரமசிங்க, சாமிக்ககருணாரத்ன, வனுஜசஹான், விஜயகாந்த்வியாஸ்காந்த், மொஹமட்சிராஸ், துலாஜ்சமுதித்த, விஷேன்ஹலம்பகே, ரவிந்து பெர்னாண்டோ, சாமிக்ககுணசேகர,கருக்கசங்கீத், குகதாஸ்மாதுளன்

நான்கு நாட்கள் கொண்டபோட்டித் தொடருக்கான குழாம்

சஹான்ஆரச்சிகே – தலைவர், நிரோஷன்டிக்வெல்ல – உபதலைவர் / விக்கெட்காப்பாளர், பவந்தவீரசிங்க, சொஹான்டிலிவேரா, நுவனிந்துபெர்னாண்டோ, அஷேன்பண்டார, அஹான்விக்ரமசிங்க, ரவிந்துபெர்னாண்டோ, கவிந்துபத்திரத்ன, திலும்சுதீர, மொஹமட்சிராஸ், சாமிக்ககுணசேகர. கேஷரநுவன்த, துலாஜ்சமுதித்த, பிரவீன்மனிஷ. அசங்கமனோஜ்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments