ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த இந்திய வீரர்களை நேரில் கௌரவிக்கும் விதமாக தமிழ்நாட்டு முதல்வர் விஜய் விரைவில் அனைவருக்கும் பிரம்மாண்ட விருந்தளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெறும் திகதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று இந்தியாவின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை குவித்து இந்தியா 4வது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது.
இத்தொடரில் பங்கேற்றுப் பதக்கங்களை பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித்தந்த தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகள் தாயகம் திரும்பிய நிலையில், நேற்று சென்னை விமான நிலையம் மற்றும் நேரு விளையாட்டு அரங்கில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் தாரை தப்பட்டை முழங்க, மாலை அணிவித்து விளையாட்டு வீரர்களுக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


