Sunday, June 28, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் அரசு - சாகர காரியவசம்

அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் அரசு – சாகர காரியவசம்

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும்  தேசிய மக்கள் சக்தி அரசு, நாட்டு மக்களால் மிக விரைவில் வீட்டுக்கு விரட்டியடிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

தற்போதைய அரசு நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விடுத்து, முற்றிலும் அரசியல் பழிவாங்கல்களை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. கடந்த காலத்தில் அவர்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை.

அரசின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கினாலும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளினாலும் நாட்டு மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

எனவே, இந்த ஏமாற்று அரசை ஆட்சியில் இருந்து விரைவில் வீட்டுக்கு விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர்.” – என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments