Sunday, June 28, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்காலியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: ஒருவர் பலி

காலியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: ஒருவர் பலி

காலி – நாகொடை பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தின் காரணமாக ஒரு மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 28 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, மற்றைய மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 39 வயதுடைய நபர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களும் அதிக வேகத்தில் பயணித்தமையே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments