Sunday, June 7, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்அடுத்த 12 மணிநேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

அடுத்த 12 மணிநேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தமிழ்நாட்டில் மழைப் பொழிவுடன் தொடங்கிய கத்தரி வெயில் பின்னர் சுட்டெரிக்க தொடங்கியது. இதற்கிடையே, கடந்த 16-ந்தேதி முதல் லேசான மழைப் பொழிவு காணப்பட்டது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைபெய்து வெப்பத்தை தணித்தது. சில மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை 27-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே அடுத்த 5 நாட்களில் அதாவது 25-ந்தேதிக்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து கேரளாவில் தென்மேற்கு பருவமழை அடுத்த 4 அல்லது 5 நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளது. இது தமிழகத்தின் சில பகுதிகளில் பரவும். இதேபோல, மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா, வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன்காரணமாக இன்று (புதன்கிழமை) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும். பின்னர் இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக் கூடும். இதனால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments