தொடர்மாடி குடியிருப்புகளை நவீனமயமாக்கும் Metro Uplift திட்டத்தின் மற்றுமொரு கட்டம் ஆரம்பம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு நகர்ப்புறங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் Metro Uplift திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
கொழும்பு 09, தெமட்டகொட, மிஹிந்துசென்புர மற்றும் சியபத் செவன ஆகிய அடுக்குமாடி குடியிருப்பு தொகுதிகளில் முன்னெடுக்கப்படும் Metro Uplift திட்டத்தின் ஆரம்பம் மற்றும் அக்குடியிருப்புகளின் தற்போதைய நிலைமைகளை கண்டறிவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடந்த 20 ஆம் திகதி கள ஆய்வில் ஈடுபட்டார்.


