இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுசாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2.10 க்கு இடம் பெற்று உள்ளது.
இவ்வாறு இயந்திரத்தில் விழுந்து இறந்தவர் கிஷ்ணன் விஜயகுமார் திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளின் தந்தையாவார்.
இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவிக்கையில் இறந்தவரின் உடலம் மவுஸ்சாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் சம்பவம் நடந்த இடத்தில் வைக்க பட்டு உள்ளது திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் ஹட்டன் நீதிமன்ற நீதிபதி வந்து பார்த்த பின்னர் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடட் கூற்று பரிசோதனை மேற்கொள்ள பட உள்ளதாக கூறினா
ர்.


