Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பிரபலத்தின் பெயரில் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரிய நபர் கைது!

பிரபலத்தின் பெயரில் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரிய நபர் கைது!

பிரபல திரைப்பட இயக்குனரின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரிய நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்து, நேற்று (12) கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

குறித்த நபர், இயக்குனரின் பெயரில் போலியான Facebook கணக்கு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, நடிகைகளிடம் பணம் மற்றும் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளார்.

இது தொடர்பில் குறித்த இயக்குனர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.

அதன்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments