Sunday, June 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்குங்ஃபூ கலைஞர் புரூஸ் லியுங் காலமானார்: ஜாக்கி சான் உருக்கம்!

குங்ஃபூ கலைஞர் புரூஸ் லியுங் காலமானார்: ஜாக்கி சான் உருக்கம்!

ஹொங்கொங் திரையுலகின் ஜம்பவானும், தற்காப்புக் கலை மேதையுமான புரூஸ் லியுங் சியு-லுங் (Bruce Leung Siu-lung) தனது 77-வது வயதில் காலமானார். இச் செய்தி உலகெங்கிலும் உள்ள தற்காப்புக் கலை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகின் ‘நான்காவது நாகம்’

1970-களில் திரையுலகிற்கு அறிமுகமான புரூஸ் லியுங், ஹொங்கொங் திரையுலகின் ‘நான்கு நாகங்கள்’ (Four Dragons) எனப் போற்றப்பட்டவர்களில் ஒருவர். புரூஸ் லீ, ஜாக்கி சான் மற்றும் டி லுங் ஆகியோருடன் இணைந்து இவரும் உலகப் புகழ் பெற்றவர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு 2004-ல் ஸ்டீபன் சௌ (Stephen Chow) இயக்கத்தில் வெளியான ‘குங்ஃபூ ஹஸ்டல்’ (Kung Fu Hustle) படத்தில் ‘பீஸ்ட்’ (The Beast) எனும் கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் மீண்டும் பிரபலமானார்.

ஜாக்கி சானின் உருக்கமான அஞ்சலி

புரூஸ் லியுங்கின் மறைவு குறித்து நடிகர் ஜாக்கி சான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“பெய்ஜிங் திரும்பிய எனக்கு இந்தச் செய்தி பேரதிர்ச்சியாக இருந்தது. அவரால் எத்தனையோ அற்புதமான பாத்திரங்களை உருவாக்க முடிந்தது. எனது பார்வையில் அவர் எப்போதும் ஒரு மகா குரு தான். பெய்ஜிங்கில் பனி பொழிகிறது, வானம் மேகமூட்டமாக இருக்கிறது… சகோதரரே உங்களை மிஸ் செய்கிறேன்!”

கடைசிப் பயணம்

சீனாவின் ஷென்சென் (Shenzhen) நகரில் கடந்த ஜனவரி 14-ஆம் திகதி அவர் உயிரிழந்தார். இதனை அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் எதிர்வரும் ஜனவரி 26-ஆம் திகதி ஷென்சென் நகரில் நடைபெறவுள்ளன.

ஆசிய நாடுகளின் வீடுகள்தோறும் ‘சென் ஸென்’ (Chen Zhen) என்ற கதாபாத்திரத்தின் மூலம் அறியப்பட்ட ஒரு சகாப்தம் இன்று மறைந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments